பூக்களில் சிதறிய பனித்துளிகளை

பூக்களில் சிதறிய பனித்துளிகளை
காலைக் கதிரொளி கவர்ந்தது
பூக்கள் சிந்தும் தேனினை
வண்டுகள் எடுத்துச் சென்றது
நிலவை கதிரவன் விழுங்குகிறது
நிலவோ தேய்ந்து தேய்ந்து வாடுகிறது
பகலை இரவு விழுங்குகிறது
இரவைப் பகல் விழுங்குகிறது
இரவு பகல் நாட்களை காலம் விழுங்குகிறது
காலம் மாயையில் அடங்கும்
உலகோ மாயையின் விரிவு
நித்திய அநித்தியச் சுழலே மாய உலகு !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-19, 9:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே