இருளை விரட்டிட விழித்தெழு மனிதா

#இருளை விரட்டிட விழித்தெழு மனிதா

துள்ளித் திரிந்த இன்பம் இல்லை
முள்ளாய் விடமாய் சூழும் தொல்லை
பித்துப் பிடித்துக் கிடந்தால் நம்மை
பிய்த்துப் போடும் கொடுமை உண்மை..!

சூதும் வாதும் நிறைந்த உலகம்
துன்பத்தில் சிக்கச் செய்யும் கலகம்
சிந்தித்து நீயும் புரிவாய் செயலும்
தந்தே போகும் உனக்கு செயமும்..!

நரிகள் கொடியை உயர்த்தும் காலம்
நல்லவர் போலே போடும் வேடம்
பாதம் தொழுதால் வாதம் உனக்கு
பார்த்து நடத்திடு தேர்தல் இருக்கு..!

இருட்டை விலக்க சுருட்டுப் பாயை
உறக்கம் கலைத்து விரட்டுச் சோர்வை
குருட்டு உலகம் மிரட்டிப் பார்க்கும்
திரட்டு பலத்தை தோல்விக்கு வியர்க்கும்..!

கண்ணை மூடிக் கிடந்தால் நாடும்
களவாணி கையில் கிரையம் ஆகும்
போராடி வாழ்வில் கிடந்தது போதும்
பொய்யும் புரட்டும் விரட்ட வாரும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Apr-19, 9:04 am)
பார்வை : 56

மேலே