வீர சுதந்திரம்
வீர சுதந்திரம்
வீரத்தியாகத்தில் விளைந்த விருட்சம் சாமி
விளங்குவதற்கு சில விபரம் சொல்றேன் சாமி
கழுத்தை சுற்றி கயிறு சாமி
கம்பெனியாக வந்தவனுக்கு கப்பம் கட்டணுமா? சாமி
கழுத்து அசையல சாமி, கலங்கவும் இல்லை சாமி
காரணம்: *கட்டபொம்மன்* வீரன் சாமி
கப்பலோட்டியவன் சாமி
கடுஞ்சிறையில் செக்கிழுத்தான் சாமி
காரணம் சுதந்திரமே இலக்காய் கொண்டு
சுற்றி வந்தான் *சிதம்பர* சாமி.
குருதி பெருகியது சாமி
கூடுவிட்டு ஆவி போனது சாமி
கொடிமட்டும் விலகல சாமி
காரணம் கொத்தடிமை கண்டு
கொதித்தெழுந்த *குமரன்* சாமி.
சோறுபானை வீட்ல பொங்கலன்னா
சோர்ந்து போகமாட்டான் சாமி
சுதந்திரபானை பொங்கலன்னா
சொல்லுல சூரியனை வைக்கும்
சூத்திரதாரி சாமி
காரணம் பராசக்திக்கு மட்டுமல்ல
பாரத மாதாவுக்கும் * பாரதி * பக்தன் சாமி.
சங்கர் சேதுராமன்