காதலியின் கடிதம்
கண்ணா
என் வாழ்விற்குப்
பார்வை கொடு
கண்ணா
என் மன்னா
நீ இல்லையெனில்
நான்
ஆவேன் மண்ணா
உனக்காக
நான் பிறந்தேன்
பெண்ணா
இரவெல்லாம்
உனைப்பற்றி
பாடுகிறேன்
பண்ணா
காதலை
எப்போது சொல்லும்
உன் நா
அது வரை
என்
செந் நா
ஆகாரம் உண்ணா
அந் நா
காதலை சொன்னா
உனக்கு
மணம் முடிக்க
தயார் என் அண்ணா
நீ இந்த தி மு க வை
ஆளப் பிறந்த அண்ணா
தி மு க என்றால்
திருமணம் முடியாத கயல்விழி
இந்த நிலவிற்கு
இடம் கொடு விண்ணா
என்னை கட்டிக்கொண்டால்
உன் வெற்றிக்கு
நான் இருப்பேன் பின்னா
இன்னும்
உனக்குத் தயக்கம்
என்னா?
உன்னை அத்தான்
என்று அழைக்கக்
காத்திருக்கு என் நா..