பலகால் எறும்பூரக் கல்குழியு மே – நன்னெறி 23

இருவிகற்ப நேரிசை வெண்பா

பகர்ச்சி மடவார் பயிலநோன்(பு) ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய்! பலகால்
எறும்பூரக் கல்குழியு மே! 23 - நன்னெறி

பொருள்:

பூரித்திருக்கும் தனங்களை உடையவளே! பலகாலம் எறும்பு ஊரக் கல் குழிந்து விடும்.

அது போல ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்தாலே, பெண்களுக்குப் பெருமை யளிக்கும் கற்பு எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி தளர்ந்து விடும்.

குறிப்பு:

திரைப்படங்களில் கதாநாயகர் கதாநாயகியைத் தொடர்ந்து இம்சித்துக் காதல் கொள்வதாகக் காட்டும் காட்சி, பல பெண்கள் இணங்குவதாகவே காட்டப்படுகிறது. அதன் பின் தனிமையில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 10:26 am)
பார்வை : 33

மேலே