வேம்பன்றோ காக்கை விரும்பும் கனி – நன்னெறி 24

இருவிகற்ப நேரிசை வெண்பா

உண்டு குணமிங்(கு) ஒருவர்க்(கு) எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி. 24

- நன்னெறி

பொருள்:

செழித்திருக்கும் சோலைப்பூக்களை வண்டு போய்ச் சேரும், ஆனால் காக்கை வேப்பம் பழத்தையே விரும்பும்.

அதுபோல ஒருவரிடம் குணம் இருந்தாலும் கீழோர் பெரிதாகக் கூறுவது அவர் குற்றங்களையே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 10:28 am)
பார்வை : 120

மேலே