புளியந்தோப்பில் கிளிகளைப் பிடித்து
ஐந்து வயதில் மகிழ்ந்து ஓடி
ஆயா கடையில் மாங்காய் வாங்கி
அனைத்து நபரும் பகிர்ந்து உண்டு
புளியந்தோப்பில் கிளிகளைப் பிடித்து
ஏரிக்குள்ளே முயல்களை விரட்டி
எருமுட்டை கொளுத்தி கம்மங்கதிரை வாட்டி ருசித்து
நபர் தோரும் பிடி அரிசி எடுத்து சேர்த்து
திட்டாதவர் வீட்டில் சோறு குண்டான் திருடி
கூட்டாஞ்சோறு பொங்கி புது சுவையில் மகிழ்ந்து
வெண்டை வெள்ளரி விளாம்பழம் திருடி
நுங்கு நுணா கள்ளிப் பழம் பறித்து சுவைத்து
கண்டபடி ஓடி கண்டதையும் மென்று விழுங்கிய
கடந்த காலம் திரும்புமோ மகிழ்ந்த நினைவு மலருமோ
பிறக்கும் குழந்தைகள் இந்நிலை அடைய
பாரின் நிலை செழிக்குமோ பருவநிலை நிலைக்குமோ.
--- நன்னாடன்