மாணவி பாட்டி

'மாணவி பாட்டி, மாணவி பாட்டி'ன்னு சொல்லறயே, அது யாருடா?
@@@@
அதோ அங்க பாரு. செவப்பா வர்றாங்களே அந்தப் பாட்டி தான். நம்ம முத்து தாத்தாவோட தம்பி வடநாட்டில வாழ்ந்திட்டு இருக்கிறாரே அவுரு குடும்பத்தோட வந்திருக்கிறாரு. அந்தத் தாத்தாவோட மனைவி தான் மாணவி பாட்டி.
@@@@
ஏன் இவ்வளவு வயசாகியும் படிச்சிட்டு இருக்கிறாங்களா? என்ன மாலை நேர முதியோர் பள்ளியா? இல்ல தொலைதூரக் கல்வி படிக்கிறாங்களா?
@@@@
டேய் பிச்சுமணி, மணிமாறன் தாத்தா வடமாநிலத்தில உள்ள பல்கலைக் கழகத்தில பேராசிரியராக வேலைக்குப் போனாரு இல்லையா, அங்க மாணவிப் பாட்டியும் பேராசிரியரா வேலைல இருந்தாங்களாம். அவுங்கள மணிமாறன் தாத்தா திருமணம் பண்ணீட்டாராம்.
@@@@
சரிடா, அந்தப் பாட்டிய ஏன்டா 'மாணவி பாட்டி'ன்னு சொல்லற?
@@@@@
அந்தப் பாட்டி பேரு மாணவிடா.
@@@@
மாணவியா?
@@@@
தமிழ் மாணவி இல்லடா. இந்தி மாணவிடா.
@@@@
இந்தில மாணவிக்கு என்னடா அர்த்தம்?
@@@@@
அதென்னவோ எனக்கு என்னடா தெரியும்?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manavi = daughter of Manu, daughter of man.

எழுதியவர் : மலர் (9-Apr-19, 6:21 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 227

மேலே