அசினோ மொட்டையன்

காத்தாயி அக்கா நாம மலைப் பகுதில இருந்தாலும் ஒரு மவராசன் நம்ம முப்பது ஊட்டுக்கும் ஒவ்வொரு ஊட்டுக்கு மேலயும் ஆன்டனா கட்டி டீவி பொட்டியக் குடுத்தாரு. நாம எலவசமா டீவி செய்தி பாக்கறம். பல படங்களையும் காட்டறாங்க. ஆமாம் யக்கா உம் பையனுக்கு ரட்டைக் கொழந்தைங்க ஆணும் பொண்ணும் பொறந்ததுங்களே, பேருங்கள முடிவு பண்ணீடீங்களா?
@@@@
அடியே கருப்பாயி நீ மருத்துவச்சி ஆச்சே உனக்குச் சொல்லாம பேரு வைப்பமா?
@@@@
சரி சொல்லு யக்கா.
@@@@@
நம்ம ஊரில எல்லாப் பிள்ளைங்ளுக்கும் இந்திப் பேருதான். அந்த டீவில வந்த விளம்பரத்தில அசினோ மோட்டோனு அடிக்கடி சொல்லறாங்க. அசினோங்கிறது. பெண் கொழந்தையோட இந்திப் பேராத்தான் இருக்கும். அந்தப் பேரு எம் பேத்திக்கு. மோட்டோனு பையனுக்கு வச்சா சரிப்படாது.. அதனால எம் மாமனாரு பேரு மொட்டையன். அந்தப் பேரையே எம் பேரனுக்கு வச்சா எங்க வம்சம் விருத்தியாகும்.
@@@@
அப்ப, உம் பேத்தி பேரு அசினோ, பேரம் பேரு மொட்டையன். டீவி பொட்டில சொல்லற மாதிரி சுவ்வீட்டு நேம்மு யக்கா.

எழுதியவர் : மலர் (11-Apr-19, 9:47 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 80

மேலே