பனித்துளி அவன் நினைவுகள்

புற்களுக்கு விருந்தளிக்க
முத்துக்களைச் சிதறியது மழைமேகம்......

அதுபோலத்தான் உன் காதலும்
என்நினைவுகளுக்கு விருந்தளிக்க
என் கனவுகளில் சிறைகொண்டது.........

இயற்கையும் இங்கு காதல் சின்னமானதோ!
பனித்துளி அவன் நினைவுகள்
என் நெஞ்சமெனும் புல்வெளியில்..........

எழுதியவர் : YUVATHA (11-Apr-19, 6:51 pm)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 345

மேலே