கன்னியே உனக்கொரு கண்ணிப்பா
பெண்ணே பெண்ணே கண்ணே கண்ணே
துள்ளும் கயலாய் எந்தன் மீனே மீனே
எனைப் பார்த்து மருளும் கண்ணாய்
நீ மானே மானே என் மானே
மெய்தீட்டிய கண்ணால் என்னை மயக்கும்
கண்ணே உன் கண்ணின் மாயம் என்ன
கண்ணே கண்ணே என் மாயக்கண்ணே
காமன் வில்போல் காட்சி தருதே புருவம்
கண்ணால் என்னை மயக்கும் காமினியே
மூடித்திறக்கும் உந்தன் இமைகள் என்ன
மலரும் மல்லிகைப்பூவா கண்ணே
எந்தன் மலர்விழியாளே மலரே கண்ணம்மா
உந்தன் பார்வையில் நான் பார்க்கும் அன்பால்
என்னை ஆளவந்த கண்மணியே கண்ணம்மா
உந்தன் கண்ணிற்கே சமர்ப்பணம் இந்த
இந்த எந்தன் சிறிய கன்னிப்பா இல்லை
கண்ணிப்பாவடி கண்ணம்மா