விராக தாபம் முடிந்தால்

எருமை மாட்டைப்போல் கலை நிறைந்தப் பையன்

விண்ணிலிருந்து இறங்கியதைப் போல் கலையிழந்த பெண்


எப்படி ஒருவரை ஒருவர் கவர்ந்தனரோ ?

ஒற்றையடிப் பாதை முடியும் ஒரு புதரில் இருவரும்


நாசியை நாவினால் நக்குகிறான் அந்த எருமை

கூச்சமே இல்லாமல் கொஞ்சுகிறாள் இந்தத் தேவதை


அக்கம் பக்கமாய் செல்லுவோர் இருவரையும் கண்டு

அதிசயத்து ஆச்சரியமடைந்து அங்கலாய்கின்றனர்


பாதசாரிகளுக்கேப் பார்க்கும் போதே வெறுப்பை ஏற்படுத்தப்

பெண்ணைப் பெற்றோர் நிலை என்னவாய் இருக்கும்


இதற்குப் பெயர் உள்ளம் விரும்பும் வெள்ளைக்காதல்

விராக தாபம் முடிந்தால் எதிர் வினையாகும் பெண்ணின் சூழல்

- - - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (12-Apr-19, 9:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

புதிய படைப்புகள்

மேலே