இது என் காதல்
என் காதல் கூட தோல்விதான்...........
என் வீட்டிற்கு இருபிள்ளை - நான்
அதில் ஆண் பிள்ளை,
கேட்டதும் ஏதும்
கிடைக்காமல் இருந்ததில்லை.
பள்ளிகள் பயின்ற வரை,
தோழிகள் யாருமில்லை.
கல்லூரி சாலையிலே - நான்
கண்ணிமைக்கும் நேரத்திலேயே
கன்னியவள் பேச்சினிலே
கலந்து விட்டேன் உண்மையிலேயே.........
பார்க்காமல் இருந்ததில்லை - நான்
பேசாமல் சென்றதில்லை,
நான் சொன்னதெல்லாம் சரி என்றாள்,
மறுத்ததெல்லாம் தவறு என்பாள்.........
ஒரு நாள்,
நம்மை பற்றி கல்லூரியில் கிசு கிசு என்றாள்.
அன்று..........
எனக்கு உன்னை பிடித்திருக்கிறது,
நான் உன்னை காதலிக்கிறேன்
என்றேன்.........
அவள்
நீ நல்லவன்,
நன்றாக இருக்க வேண்டும்,
உனக்கு ஏற்றவள் நான் இல்லை
என்றாள்..........
காரணம் கேட்டேன்,
அழுகையே பதிலாய்.
பேசி பார்த்தேன்,
மவுனமே முடிவாய்.
வலி.......... மனது முழுவதும் வலி...........
அழுதேன், முடிந்தவரை அழுதேன்.
காலையில் எழுந்தேன்,
அன்று நான் கண்டது கனவு மட்டுமே...
ஆனாலும் என் மனதில் வலி மட்டுமே...
கனவில் காதலை சொன்னதற்கே
இவ்வளவு வலி என்றால்,
நிஜத்தில் சொன்னால்..............
அவள் ஏற்க மறுத்தாள்............
போதும் இந்த வலியே,
அந்த வகையில்,
என் காதலும் தோல்விதான்..........
எனவே,
யாரும் காதலை சொல்லாதீர்கள்.
கனவில் மட்டும்.............
அவளின் நினைவுகளுடன் சந்தோஷமாய்,
உதயா.......