அவள் பெயர் மது
எதுவரை வாழ்வு எனைநடத்தி போயினும்
அதுவரை உயிரும் உணர்வற்று போயினும்
எப்பரி மாணத்தில் உற்சாகம் பிறக்குமோ
முப்பரி மாணத்தில் முழுசுகம் கிடைக்குமோ
மோகம் பிறக்கும் மைய புள்ளியில்
தாகம் மறக்க போதையில் கிடக்கும்
மேதினி போற்றும் கவிஞர் பலர்க்கும்
ஓர்கையில் மதுவும் மறுகையில் மாதரும்
தீர்க்கமாய் கேட்டான் பாவலன் ஒருவன்
மயக்கமாம் ஆடைசூடி மன்னனிடம் சேர்வாள்
தயக்கம் விடைபெற்று நாணமும் முடிவுற்று
நாயகன் சலிக்குமட்டும் கூடிக்கூடி களித்திருந்து
பிரிகின்ற அவசரத்தில் ஆடையை மறந்தாள்
கூடலிற் கண்டசுகம் கருத்தில் நிழலாட
மடந்தை மறந்துவிட்ட ஆடைதன் கரத்திலேந்தி
நடந்ததை எண்ணியெண்ணி மஞ்சத்தில் துயில்கிறான்
பிடிவாதக் காதலை கனவிலே பயில்கின்றான்!!!
~~கார்த்தி கண்ணதாசன்