ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தொடர்ந்து வா தொட்டு விடாதே
வாகன வசனம்
காதலனுக்கும் பொருந்தும் !

வாய்க்கொழுப்பால்
வாங்கிக்காட்டுவது வாடிக்கையானது
கருத்து கந்தசாமி நடிகைக்கு !

அசந்தா ஓவியம்
அழகாய் பேசியது
என்னவள் !

எல்லோரா ஓவியம்
இனிதே இசைத்தது
என்னவள் !

நடந்து வந்தது
உலக அதிசயம்
என்னவள் !

நிற்கும் திடிரென
எனவே கவனம்
பங்குத்தானி வண்டி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Apr-19, 12:10 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 95

மேலே