தாய்மொழி மறக்கும் கவிஞன் நான்

வலிகள்இல்லை உன் வார்த்தைகளில்
கணக்குதடி உன் மௌனங்களால்
பிறக்குதடி புது கவிதைகளாய்
உன் அழகு எல்லாம் அதன் கருப்பொருளாய்

காதலை கவிதையில் சொல்லிடவே
கோடியுண்டு பூமியில் ஏராளம்
எனக்கு மட்டும் அந்த அவதியில்லை
கவிதையே காதலியாய் வந்தததனால்

தினம் கனவினில் சிறகை விரிப்பேனே
நிழலாய் உன்னை ரசிப்பேனே
தணலாய் காதல் வளர்ப்பேனே
நீ கேட்டிடும் காணிக்கை கொடுப்பேனே

எத்தனை நினைத்தும் முடியவில்லை
உன் மௌனத்திற்கு ஏனோ மரணமில்லை
அந்த ரணமே தினம் தினம் தொடர்ந்தாலும்
மனம் உன்னை வெறுக்க மறுக்கிறதே

ரணத்தின் மருந்தாய் உன்னை நினைத்து
மீண்டும் ரணம் கொள்ளும் பூனை நான்
பழமொழி சில நொடி பொய்க்குமென்று
தாய்மொழி மறக்கும் கவிஞன் நான்

இத்தனை மாற்றம் கண்டதெல்லாம்
புதைமணலாய் கண்கள் கொண்டதனால்
உன் கண்களை காதலாய் கண்டதனால்...

எழுதியவர் : ருத்ரன் (15-Apr-19, 10:46 pm)
பார்வை : 191

மேலே