அன்பு காதலனே
அன்பு காதலனே
ஏனோ தடுமாற்றம்
ஏன் என்று தெரியவில்லை
இனம் புரியாத மகிழ்ச்சி
எதனால் என்று புரியவில்லை
சொல்லயிலாத ஈர்ப்பு
காரணத்தைக் தேடுகிறேன்
புதிதாய் பிறந்தது போல் ஓர் அற்புத உணர்வு
உண்மை தான் சத்தியமான உண்மை .
உன் நடை உடை பாவனை
உன் அற்புதமான கவிதை
உன் அலட்டலில்லா அறிவார்ந்த பேச்சு
உன் ஆரவாரம் இல்லாத நடத்தை
எல்லாமே என்னை கவர்ந்தது
மிகவும் கவர்ந்துவிட்டது .
என் இதயத்தில் நிரந்திரமாக குடியேறிய
என் அன்பு கதாநாயகனே
என் இனிய காதலனே
என் மணம் உன்னை காண
எப்போதும் ஏங்குகிறது, துடிக்கிறது.
ஒவ்வொரு முறையும் நீ
என் பெயர் உச்சரிக்க
என் உடல் புல்லரிக்க
என்னுள் ஏற்படும் இன்பம்
அளவற்றது
மீண்டும், மீண்டும்
நீ என் பெயர் சொல்லி அழைக்க
என் பெயர் மிகவும் அழகாகிறது.
என் உள்ளம் கவர்ந்த கள்வனே
என் காதலை உன்னிடம் எப்படி
சொல்வது
ஆயிரம் தான் இருந்தாலும் நான்
தாய் வழி சமூகம் அல்லவா
காளையே கன்னி என் கண்கள் உனக்கு புரியவில்லையா
காவிய நாயகனே என் சமிக்கை உனக்கு
தெரியவில்லையா
என் நினைவில் நீங்கா இடத்தில் இருக்கும் என்னவனே
புரிந்து, அறிந்து விரைவில் கூறிவிடு
'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று
இன்ப தேன் வந்து பாயும் அந்த
மகோன்னதனமான வார்த்தைக்கு
தவிக்கும், துடிக்கும், ஏங்கும்
உன் அன்பு காதலி.
- பாலு.