ஆனந்த யாழை

சிவந்த மின்னலில்
மழை வருமென அறிந்தேன்.
காற்று இடக்கை
பக்கத்தை கடந்து சென்றது.
இரவில் கொக்குகள்
வேடனை போல் அலைந்தன.
இடியின் ஒலிப்பு
அத்துணை கௌரவமாக இல்லை.
காற்று இப்போது
என்னை மோதி கடக்கிறது.
கிழக்கும் மேற்குமாக
நடந்து சென்று நடந்து வருகிறேன்.
யார் வீட்டிலும்
எந்த இசையும் கேட்கவில்லை.
பூனையின் நிழல்
சுவரில் எழும்பி அமிழ்கிறது.
பழகிய பூனைகள்
சில சமயம் கடிக்காது.
ரஹீனா இப்போது
அப்பாவென தேடி வரக்கூடும்.
அவள் முன்பே
மழையில் நனைந்து விட்டாள்.
(அவள் தேசத்தில்).
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் பாடலை கேட்பாள்.
மழை தூரலாகி
சுவர் மீது மெத்'தென ஓட்டுகின்றன.
அவள் பாடலை
நேற்றேல்லாம் கேட்டிருப்பாள்.
முன் வந்த
பழைய பாடல் என்றாலும்
அவளுக்கு அது
இனிமேல் புதிதுபோல் இன்று.
கேளுங்கள் அப்பா
என்று அனுப்பி இருந்தாள்.
மழை முதிர்ந்து
அறைக்குள் ஓடி நின்றேன்.
விளக்கு நிலையிழந்து
ஒளியில் கலைந்து அணைந்தது.
துமியாய் சிதறியபோது
மழைக்குள் நான் அண்டினேன்.
இப்போது கேட்கிறது
ஆனந்த யாழை மீட்டுகிறாய்.
யாருக்கும் கேட்காது
மழை பாடுவதுபோல் கேட்கிறது.
ஒரு சௌகர்யம்
மழையில் அழுதாலும் தெரியாது.

எழுதியவர் : ஸ்பரிசன் (17-Apr-19, 11:54 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : aanantha YAALAI
பார்வை : 447

மேலே