மவுனம் அவள் கலை

மலரே! மலரே! - என்
சங்கீத சாரலே,
கலையோவிய கடலே,
சீற்றமேன் குளிர்விரே.

அலையே! அலையே! - உன்
மௌனத்தால் அடிக்காதே,
காற்றுயான் நடிக்காதே,
மற, அறிவேனென் வினையே.

பனித்துளியே! பனித்துளியே! - இன்
வாழ்விது, காலதேவன் கையிலே,
யாதுனலமுன் பொய்யிலே,
திற, அறிவேனுண்மை இதயமதையே.

இறைவியே! இறைவியே! - உன்
தேவதைச் சொந்தங்கள் போதுமே என்றிடுதே,
தாமதக்கனங்களால் உள்ளம் துடித்திடுதே,
பிராத்திக்கிறேன் காதலூடல் ஓயவே.

உயிரே! உயிரே! - என்
உயிர்க்கொடு, போதும் உயிர்க்கெடு,
நரக நிலையிது,
மவுனம் கலை, சொர்க நிலையருள்வீரே.

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (19-Apr-19, 8:31 pm)
சேர்த்தது : Felix Jesudoss
பார்வை : 294

மேலே