உன் காதலன் யாரம்மா

உன் காதலன் யாரம்மா
பெண்ணே……
கண்ணுக்கு கண் நோக்காது
கயமை ஏந்தித் தாழ்கிறதா
அவன் பார்வைகள்……

இலக்கணம் ஏதுமின்றி
இச்சைகளை மையங்கொள்கிறதா
அவன் வார்த்தைகள்…..

ஆசைகளைக் கட்டவிழ்த்து
அவயங்களை அடைக்கலம் கேட்கிறதா
அவன் அன்புக் கரங்கள்…..

இலக்கறியாப் பயணத்தில்
இன்புற்று நீள்கிறதா
அவன் பாதைகள்….

தனிமையின் இருள் தன்னை
ஒத்தாசை கேட்கிறதா
அவன் நட்பு……

ஊர்ஜிதம் செய்
உன் காதலுக்குள் பிரவேசித்த
கயவன் அவனென்று……


சு. உமா தேவி

எழுதியவர் : (21-Apr-19, 10:53 pm)
பார்வை : 289

மேலே