பொன்னூஞ்சல்

பொன்னூஞ்சல்
*********************************

அண்ணலாம் இராமனுடன் ஆரணங்கு சீதையவள்
சொண்ணம்பதி ஊஞ்சலில் ஆடுகின்ற காட்சிதனை
விண்ணவரும் மன்னவரும் கண்குளிரக் காண
நான்மறையும் அதன்வழியே கீதங்கள் பாடியதே !

மாணிக்கக் கல்பதித்த பொன்னிற ஊஞ்சலிலே
தன்னவனாம் இராமனுடன் சீதையவள் ஆடுவதை
விண்தோன்றும் சூரிய சந்திரகுல மன்னவரும்
கண்ணாரக் கண்டதில் திகைத்தே நின்றனரே!

துந்துபி முழங்க காந்தர்வர் இசைவழங்க
அந்தவானத்த ரம்பையர் சீர்நடம் ஆட
வந்தமர்ந்த மன்மதனோ ரதியோடு தலைகுனிய
அந்தரத்தார் கைகள் சுகந்தமலர் தூவ

சீதையும் இராமனும் மகிழ்ந்தே ஆடினர்
கண் தஞ்சம் அடைந்த பொன்னூஞ்சல் இதுவன்றோ !
***********
சொல் விளக்கம் :=
சொண்ணம் = பொன்
அந்தரத்தார் = தேவர்கள் , புவியில் கால் பதியார்

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Apr-19, 3:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 164

மேலே