நெஞ்சில் ஈரம்

நெஞ்சில் ஈரம்
பூமித்தாய்
உடல் நடுங்கி
பிளந்து காட்டுகிறாள்
நெஞ்சினை….
ஈரமில்லை என்று….
மனிதனும்
அவள் நெஞ்சினை
ஆழ்துளையிட்டு
பிளந்து காட்டுகிறான்
அவன் நெஞ்சிலும்
ஈரமில்லை என்று….

சு.உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (23-Apr-19, 11:31 am)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : nenchil eeram
பார்வை : 103

மேலே