நான்கு தளபதிகள்
(பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது)
@@@@@
என்னங்க பெரியவரே, நாலு பசங்களக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. நாலும் பேரும் தோற்றத்தில ஒரே மாதிரி இருக்கறாங்க.
@@@@
அய்யா இவுங்க நாலும் பேரும் எம் பேரப் பசங்க. எங் கடைசிப் பையன் கரிகாலன் மனைவி வேல்விழிக்கு மொதப் பிரசவத்திலேயே இந்த நாலு பேரும் பொறந்தாங்க.
@@@@
சரி அவுங்க பேருங்களச் சொல்லுங்க.
@@@@
நாலு பேருக்கும் ஒரே தானுங்க.
@@@@
ஒரே பேரா? என்னங்க பெரியவரே கொழப்பறீங்க?
@@@@@
தளபதி தான் அவுங்க பேரு.
@@@@@
வெறும் 'தளபதி' ?
@@@@
இல்லங்க அய்யா.
@@@@@
எம் பையன் பேரு நல்லசாமிங்க. பசங்க பேரு 1. ந. மூ. தளபதி 2. ந. இ. தளபதி 3. ந. ந. தளபதி 4. ந. க. தளபதி.
@@@@@
என்னங்கய்யா மறுபடியும் கொழப்பறீங்க?
@@@@@
இப்ப வெளக்கமா சொல்லறனுங்க. மூத்த தளபதி, இளைய தளபதி, நடுத்தளபதி, கடைசித் தளபதி.
@@@@@
எதுக்குங்க இந்தப் பேருங்கள வச்சீங்க?
@@@@
நாலும் வருங்காலத்தில அரசியல் திரைப்படம் இரண்டிலும் பிரபலங்கள் ஆகணும். அதுதாங்க எங்க ஆசை.