நான் நூல்

நான் புத்தகம்

என்
கருப்பைதான்
உங்கள் கவிதைகளை
சுமக்கின்றது கருப்பாய்

நான் புத்தகம்
என்னைப் படியுங்கள்
படியுங்கள்
புத்தான அகம்
கிடைக்கும்

புத்தகம் நான்
தீர்ப்பதோ உங்கள்
அறிவு தாகம்

முகநூலைப்
பார்க்கும் நீங்கள்
என் அகநூலை
இப்போதெல்லாம்
பார்ப்பதே இல்லை

நான் நூல்
என்னைப் பிடியுங்கள்
படியுங்கள்
உங்களுக்குப் பட்டம்
கொடுத்து
வானிற்கு அழைத்துச்செல்வேன்

நீங்கள் பார்த்துக்கொண்டு
இருப்பதோ செல்லை
யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை அரிக்கும் செல்லை

என் வரி
உங்கள் அறிவின்
முகவரி

கறிக்கடைக்காரன்
கறி அரிவான்
அவனையும்
அற நெறி
அறியவைப்பவள் நான்

நான் ஒரு
எழுத்தாளனின் குழந்தை
நீ
என் நூலை
எடுத்து கிழிந்த
சமூகத்தைத் தை

நானும்
பூவே தாள் இருப்பதால்
நானும்
பூவையே
அறைக்குள் மூடியே
இருப்பதால்

நூல் நான்
உங்கள் கிழிந்த
அறிவைத் தைக்க நினைக்கிறேன்

நான் அரிவை
என்பதாலோ நீங்கள்
என்னை கிழிக்க நினைக்கின்றீர்

மனிதா
என்னை தினமும் படி
நான் ஆவேன்
உன் வெற்றியின் படி

எழுதியவர் : புதுவைக் குமார் (23-Apr-19, 10:16 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : naan nool
பார்வை : 122

மேலே