திரும்ப கேட்கின்றாய்
உன் வார்த்தைகளை
அந்த மின்னணு செய்தி
என்னிடம் சேர்ப்பித்தது...
ஒப்பனையற்ற வார்த்தைகளில்
ஒப்புதல் வாக்குமூலம்
கரம்பிடித்து நடந்த நாட்கள்
நகராமல் மனதில்
நித்திரை தொலைத்த நாட்கள்
நினைவுகளில் நீங்காமல்
நித்திரை தொலைத்து
எழுதியதின் பதிவாக
ஆங்காங்கே தேங்கி போன வார்த்தைகள்...
திரும்ப கேட்கின்றாய்
எதனை தந்துவிட...
உன் குறுமீசை குறுகுறுப்பில்
இதழ் பதித்த முத்தங்களையா...
தினம் தினம்
தீண்டிக் களித்த ஸ்பரிசங்களையா...
எப்படி அனுப்ப
இதே மின்னணு செய்தியிலா...
கடிதத்தில் பொட்டலமாகவா...?