வெறுமையின் வேடிக்கை

நினைவுகள் கனவுகள் எல்லாம் நிஜங்களாகி
நிகழ்ப்பவை எல்லாம் நிழல்களாகி
மறைந்து விட்டால் என்ன ?
பிரிவுகள் துயரங்கள் எல்லாம் தூரச்சென்று
பிரியங்களும் இன்பங்களும்
சூழ்ந்து கொண்டால் என்ன ?
வெறுமை என்னை வெறித்து போகச் செய்கிறது
தனிமை என்னை தவித்து போகச் செய்கிறது
ஏனோ அமைதி கண்களில் மட்டும்
கலவர பூமியாய் நெஞ்சம் கொதித்து
கொண்டிருக்கும் வேளையில்
உலகம் ஒரு திசை நோக்கிச் செல்ல
நான் மட்டும் எதிர் திசைச் சாலையில்

எழுதியவர் : Moonchanta (27-Apr-19, 10:14 pm)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 87

மேலே