வந்தாள் நின்றாள் காதலானாள்

பூவை புன்னகையில்
கவிதையானாள்
பூக்களுடன் சேர்ந்து
சேலையில் சோலையானாள்
தென்றலுடன் நடந்து வர
அசையும் சிலையானாள்
என்முன்னே வந்தாள் நின்றாள்
காதலானாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-19, 11:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே