என் காதல்பூ
மனம் தரும் மலரெல்லாம் எல்லோர்
கண்களுக்கும் விருந்தாய் இருக்க
என் கண்களுக்கு மட்டுமே விருந்தாய்
அமைந்த பூ அல்லவோ நீ எந்தன்
உயிர்க் காதலியே, நான் விரும்பும்
எந்தன் மனப்பூ என் காதல்பூ நீயே
என் பக்கம் நீ இருக்க பூஞ்சோலையில்
பூத்திருக்கும் பூக்களெல்லாம் என் கண்ணிற்கு
நீதானே தெரிகின்றாய் நீ மட்டுமே.