மௌன தாஜ்மஹால்

என் மௌனச் சத்தங்கள்
அவளின் காதுகளை எட்டாமலே
அவளின் மௌனக் கனவுகள் போல்

சொல்லாத காதல் போல்
செல்லாத காசாக - அவளின்
அந்த ஊமைக் கனவுகளில்
அந்த காதலும்

இடம் பெயர்ந்தும்
இடம் பெற முடியாமல்
அவளின் இதயத்தில்...

அவள் வீசிச் சென்ற
அந்த ஓரப்பார்வை
ஓராயிரம் கதைகள் சுமந்தபடி

கனவுகளின் நாயகியவள்
காதலை விடு
காதலிப்பேன் என்கிறாள்
எந்த காதலை கொடுப்பது
அவளின் காதலுக்கு ...?

மனதிலே புதையுண்ட
அந்த ஊமைக்காதலின்
கல்லறை மிச்சங்கள்
மனதில் தாஜ்மஹாலாக...

அவளுக்கு எங்கே தெரியும்
கல்லறையில் என்
காதல் துயில் கொள்வது
அவளின் காதலுக்காகவென்று...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-Apr-19, 12:16 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : mouna tajmahaal
பார்வை : 264

மேலே