நாலு பேர் நாலு விதமான பேச்சு

பண்பாடு கலாச்சாரம் என்னும் பேயரில் இன்னும் பெண்களை அடிமைப் படுத்தி...

பெண்களை சாதிய ஆணவப்படுகொலை செய்து
பக்தி கலாச்சார மயக்கத்தில் வைத்து...

அடக்கிவைக்கும் இந்திய சமுதாயம் நாசமாய் போகட்டுமே...!

அன்பாக பேசினால் அலைகிறவள்
கோபமாக பேசினால் திமிரானவள்...

கேட்டதிற்கு எல்லாம் பதில் கூறினால் வாயாடி
நேர்த்தியாக உடை அணிந்தால்
ஒப்பணைக்காரி...

அவளுக்கு பிடித்தாற் போல் இருந்தால் சுயநலக்காரி
ஆண் நண்பன் இருந்தால் வேஷக்காரி...

பிடித்ததை செய்தால் பிடிவாதக்காரி
கணவனோடு அன்யோன்யமாக இருந்தால் கைகாரி...

வழக்காட்டினால் அடங்காபிடாரி
தன்னை தற்காத்துக் கொள்ள கோபத்தை முன் வைத்தாள் முன் கோபக்காரி...

அப்பப்பா...!

இன்னும் எத்தனை பெயர்கள்தான் பெண்களுக்கு இந்த மதிகெட்ட சமுதாயத்தில்...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Apr-19, 11:28 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 107

மேலே