கொள்ளை மலிவு

டெம்போ வண்டியைச் சுற்றி
மகிழ்ச்சியுடன் மனிதர்கள்

தக்காளி நாலு கிலோ
வெங்காயம் மூன்று கிலோ

கொள்ளை மலிவு விலை
ஒவ்வொருவர் கையிலும் பை

சற்று தள்ளி நின்றிருந்தான்
வெறுங்கை கண்கள் நிறைய நீர் -

கொள்ளை போன விவசாயி

எழுதியவர் : Dr A S KANDHAN (2-May-19, 9:45 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : kollai malivu
பார்வை : 672

மேலே