மே தினம் இன்று

உழைப்பார் இல்லாது முதலாளி வர்கம்
எது முதலாளி இல்லாதுண்டு உழைக்கும்
உழைப்பாளி வர்கம் அறி

உழைப்போர் உயர்த்திட வானம் தொடும்
முதலாளி வர்கம் உழைப்போரை அவர்
உள்ளம் குளிர பேணுவதில்லையே ஏன்
இந்நிலை மாறவேண்டும் உழைப்பாளி
வாழ்வில் உயர வேண்டும் இல்லார் என்று
வர்கம் ஏதும் இல்லாமல் போதல் வேண்டும்
நாட்டில் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்
மே தினத்தில் இதை நினைவுகொள்வோம்
செயல் படுத்த முழு முயற்சி செய்வோம்
கள்ளமில்லா வாழ்வு மலரட்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-May-19, 9:11 pm)
Tanglish : maay thinam indru
பார்வை : 46

மேலே