உன் நினைவுகள் எங்கே

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னைசொல்லி குற்றமில்லை
எல்லாம் அவன் செயல்
படைப்பில் எவை நிரந்தரம்
பக்தியில் ஏது பயங்கரம்
எல்லாப் புகழும் படைத்தவனுக்கே
யார் அறிவார் அவனை
ஆனால் மனிதனின் மனம் அறியும்
படைப்பின் நல்லெண்ணம் ,
பார்க்கும் மனித பார்வையில் புரியும்,
புரியாத புதிராகவும் விளங்கும்
அவை மனித இதயத்தின் மங்கிய ஒளியில் .

மனிதனே உன் அன்பு ஓன்று மட்டும் போதும்
நீ கடவுளை அறிந்து கொள்ள
உன்னை நீ நேசிப்பது போல்
உன் அடுத்திருக்கும் மனிதனை அன்புசெய்
அப்போ கடவுளை நீ அறிவாய்
இலகுவான வழியில் கடவுள் நம்முன்னே,
காரணங்கள் தேட தேட நம் இதயங்கள்
அங்கலாய்க்கின்றன அமைதியின்றி
நம்முன்னே, நம்முடனே கடவுள் .
அலைபாயும் மனிதனே அமைதி கொள்.
ஆண்டவன் எங்கே/ எப்படி/தேடி ஓடாதே
அமைதியில் உன்னுடன் வாழும் கடவுள்
உன் செயல் அனைத்தும் அறிகிறார்.
அவரின் அமைதி உன்னிடம் இல்லையே
ஆண்டவனின் ஆலயம் நீதானே
ஒவ்வொரு மனிதனிலும் இறைவனைக் காணும் நீ எங்கே/
உன் நினைவுகள் எங்கே /
வெளிச்சத்தில் உள்ளதை இருளில் தேடாதே ,
இறைவனின் வெளிச்சத்தில் உன்னை தேடு .

எழுதியவர் : பாத்திமாமலர் (3-May-19, 11:21 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 391

மேலே