காதலைச் சொல்லிடு
என் தாயிடம் சொன்னேன்
தைரியமாய்...
என் காதலைப்பற்றி!
இனியும் நான் சொல்லவில்லை
இன்பக்காதலை...
அவளிடம் மட்டும்!
என்னைப்போல்
அவள் தயங்கவில்லை
சொல்லிவிட்டாள்
அவள் காதலை
அவளுக்கு பிடித்தவனிடம்!
சொல்ல வேண்டியதை
சொல்லாமல் இருப்பது
முட்டாள் தனமென்று
விழித்துக் கொண்டேன்
என்னை விரும்பியவளை
மணந்து கொண்டேன்...!