மென்மையானவள் - முடிவு

பல நாட்கள் தள்ளிவைப்புகளுக்கு அப்புறம் தீர்ப்பு வந்தது.
" விளைநிலம் விவசாயத்திற்கே உரியது. ஆகவே, அந்நிலங்களில் சாலை அமைக்கத் தடை விதிக்கப்படுகிறேன். ",என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பால் மகேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
அவனை சார்ந்தோரும் கொண்டாட, நல்லபடியாக அறுவடை முடிந்தது.
அமோக விளைச்சலில் விளைந்த நெல்லை அரசு நெல் கொள்முதல் அங்காடியில் குறைந்த லாபத்திற்கு விற்றார்.
வீட்டிற்குத் தேவையான நெல்மூடைகளை கொண்டுவந்து குடோனில் அடுக்கி வைத்தார்.
மீண்டும் பருவமழை தொடங்க, விளை நிலங்களில் மீண்டும் நெல் விதைக்கப்பட்டது.

முத்துவிற்கும் மகேஷிற்கும் பெரியோர் அசிர்வாதத்தோடு திருமணம் முடிந்தது.

மகேஷ் சாதித்தான் என்பதை விட மென்மையானவள் முத்துவால் மகேஷ் சாதித்தான் என்று சொல்வதே சரியாகும்.

உலக வாழ்க்கை எண்ணற்ற போராட்டங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது.
போராட்டங்களை எதிர்கொள்ள அன்பான ஒரு துணை நிச்சயம் வேண்டும்.
அப்போது தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உருவாகி எந்த பிரச்சனையையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும்.

" அட போப்பா! வாழ்க்கைத் துணை வந்தப் பிறகுதான் நம்பிக்கையே இல்லாமல் போகிறது. ",என்றிடும் உங்கள் மனக்குமுறலையும் அறிவேன்.

கவலையை விடுங்கள். உங்கள் வாழ்வை
சற்று பின்னோக்கி அலசி ஆராயுங்கள்.
தவறு எங்கு நிகழ்ந்துள்ளது என்பதை உங்களால் காணமுடியும்.

ஆனந்தமான வாழ்க்கை அமைய அன்போடு வாழ்த்துகிறேன்.
நன்றிகள்.
~முற்றும்~

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-May-19, 3:48 pm)
பார்வை : 547

மேலே