கடற்கரை காட்சிகள்💚

"கடற்கரையின் மின்விசிறி இயங்கி கொண்டே இருக்க புகைத்தலை ஊதி ஊதி நெஞ்ஜோர நினைவுகளை அசைபோட்டு சப்புகிறது ஒரு கூட்டம்..."
"புதுமையான இன்பக் கணவுகளை இயல்பாக பேசி,காதலை மனதால் இசைத்து கொண்டே மார்பை மடியாக்குகிறது ஒரு கூட்டம்"
"மணல் வீடு கட்டி மறுபுறம் ஜன்னல் வைத்து,வீட்டை காவல் காத்து நிற்கிறது
ஒரு கூட்டம்"
"இயற்கை தன்னுடைய இறகை விரித்து காட்ட,அதன் குழந்தைகளான நட்சத்திங்கன் மின்னி மின்னி அழும் காட்சியை ரசிக்கிறது ஒரு கூட்டம்..."
"உறவுகளின் குறைகளையும்,உலகத்தின் விமர்சனங்களையும் பொட்டலங்களாக கட்டி கொண்டு வந்து வார்த்தைகளின் முடிச்சை அவிழ்த்து விட்டு இளைப்பாறுகிறது ஒரு கூட்டம்"
"வேடிக்கையையும் விளையாட்டையும்
தன் வயதுக்குள் பொத்தி வைத்து கொண்டு, சுய புகைப்படத்தில் சிரிப்பை தூவி விடுகிறது ஒரு கூட்டம்"
"அன்றாட விடியலுக்காக இரவின் துனையோடு நடந்து மெல்ல மெல்ல வியாபார விடியலாக மாற்றுகிறது ஒரு கூட்டம்..." ****இதோ! கடற்கரை காட்சிகள் இவன் வழியாக கரையேறுகிறது****

எழுதியவர் : இஷான் (6-May-19, 4:13 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 176

மேலே