ஜன்னல் காதல்
ஜன்னல் காதல்
அழகிய கிராமம்
தாத்தா பாட்டி வீடு
கல்லூரி முடிந்து
விடுமுறை நாட்களில்...
இளஞ்சூரியன் எட்டி பார்க்க
சோலை குயில் அழகாக பாட
சேவல் கூவ
பறவைகள் இறை தேடி வானில் வரிசையாக பறக்க
வண்ண மயில் தோகை வரித்தாட
தூக்கத்தில் இருந்து நான் துயில
சோம்பல் முறித்து அதை ஜன்னல் வழியே திறந்து விரட்ட
எதிர் வீட்டு ஜன்னலும் அதே நேரம் திறந்தது
ஒரு நிமிடம் உறைந்து விட்டேன்
மின்சாரம் தாக்கியது போல்
கம்பன் எழுதிய மரபு கவிதை
எதிர் வீட்டு ஜன்னலில் தோன்ற
எட்டாவது உலக அதிசயம் அவள்
ஐநா சபையில் கூட
இந்த உண்மையை உறக்க சொல்வேன்
வைத்த கண் வாங்காமல்
நான் மட்டும் அல்ல அவளும் தான்
கண்களா அவை இல்லை தூண்டியல்
மாட்டிக்கொண்டேன்,சிக்கிகொண்டேன்
இதயத்தை அவளிடம் பறிகொடுத்தேன்
காதல் வயப்பட்டேன், காவியம் எழுத புறப்பட்டேன்
வெட்கத்தினாள் சிவந்தன அவள் கண்ணம்
தன் கரங்களால்
ஜன்னலை மூடினாள்,
மூடுமுன் மீண்டும்
ஒரு முறை அவள் ஓர கண்களால் என்னை விழுங்கினாள்.
தாவினி உடுத்திய அந்த அழுகு மங்கை
இதுவரை நான் பார்திராத அழகு நங்கை
என் கிராமத்து காதல் பைங்கிளி
இவள் சொன்னதை சொல்லும்
பச்சை கிளியா
அல்லது ஞானமுள்ள
அண்ண பறவையா .
பச்சை புடவை அனிந்த
அன்னை வயல் வெளியில்
வரப்போரம் ரசித்த வண்ணம் நான் நடக்க எதிர் பாராமல்
எதிரே வந்தாள்
எதிர் வீட்டு ஜன்னல்
சாளரம் வழியே தெரிந்தவள்
தாவினி உடுத்திய
தமிழ் பெண்ணாக
பிரமித்து போனேன்
அவள் இயல் கண்டு
கண்களால் மீண்டும் என்னை பார்த்து சாகசம் செய்ய
சொக்கி போன நான்
தயக்கம் இல்லாமல் அவள் பெயர் கேட்டேன்
புண்ணகைத்தாள் அந்த பூவை
சிதரிய சில்லரை ஒலி போல் சிரித்தாள்
செவ்விதழை திறந்து
மணிமேகலையின் தோழியின் பெயர்
என்று நேரடி விடை கூறாமல்
மான் போல் ஓடிவிட்டாள்.
மணிமேகலையின் தோழியின்
பெயர்........யோசித்தேன்
ஆம் சுதமதி...... சரி தான்.
சுதமதியே தான்.
ஜன்னல் வழியே தினம் பார்வைகள்
இடம் மாறின
இடம் மாறியது பார்வை மட்டும் அல்ல இதயமும் தான்
தீராத காதல் தீயாக வளர்ந்தது
அதே வயல் வெளியில்
அவளின் தன்னந்தனி திடிர் சந்திப்பு
சுதமதி.... நில்...
மனதில் இருந்ததை கொட்டிவிட்டேன்
ஆழ்ந்த அமைதி அவளிடம்
நிலவு முகம் சூரியன் போல் சிவந்தது
கால் விரல்களால்
பூமி தன்னில் கோலம் வரைந்தவள்
சற்றே நிமிர்து என்னை நோக்கினாள்
அய்யகோ கண்களால் இவள் என்னென்ன மாயாஜாலம் செய்வாளோ
அதான் சொன்னேனே இவள் எட்டாவது அதிசயம் என்று
மீண்டும் தலை கவிழந்து விரல்களால்...
உன் பதில் என்ன....
ஏறகுறைய ஒரு நிமிடம் அமைதி
சுதமதி... உன் பதில்...
தலை உயர்ந்தி என்னை பார்த்தவள்
" என் செயலே உங்களுகான பதில்"
கல, கலவென சிரித்து கொண்டே ஓடிவிட்டான்.
டுயூப் லைட் எனக்கு தாமதமாக புரிந்தது
மெளனம் சம்மதம் என்று.
- பாலு.