என் இதய கமலமடி நீ
அழகு மலர் வாசமிகு நறுமலர்
தித்திக்கும் தேன் ஏந்தும் மாமலர்
அதுவே புட்கரத்தில் பூத்திருக்கும் செந்தாமரை
தாமரையின் கழுத்து நீருக்கு மேல்
மலரின் தூய்மை அது போல
அதன் பெரும் இலைகள் மேல் நீர்த்துளிகள்
ஒரு போதும் தங்குவதில்லை அப்பழுக்கில்லா
தெய்வ மலர் மேன் மலர் தாமரையே
பெண்ணே , உன்னைக் கண்டேன் கண்டேன்
உந்தன் வண்ண வண்ண சிவந்த வட்ட முகத்தில்
உந்தன் அழகிய நீண்ட கழுத்தில் தாமரையின்
எழில் மிகு தோற்றத்தை , உந்தன் கார்மேகக் கூந்தல்
பரப்பும் சுகந்தத்தில் தாமரையின் மெல்லிய
வாசம் நுகர்ந்தேன் நான் என்னை மறந்தேன்
அப்படியே கண்ணை மூடி மோனா நிலைக்கு சென்றேன்
என் இதயத்தில் நீ கமலமலராய் இதழ்களெல்லாம்
விரிந்து சிரித்து என்னை ஆட்கொள்ள கண்டேனே