உள்ளதில் உள்ளது
நெல்லில் தோல் அது நீங்கி விடின்
அரிசி எனப் பெயராகும்
பழத்தின் தசை அது நீங்கி விடின்
விதை எனப் பெயராகும்
கிளையில் இலைகள் எல்லாம் நீங்கி விடின்
கழி எனப் பெயராகும்
உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவன்
ஒண்டிக் கட்டை எனப்படுவான்
உயிர் நீங்கி உடல் கிடப்பின்
சவம் எனப் பெயர்படும்
எண்ணத்தில் நற்சிந்தனை கூடிவிடின்
ஞானி என அழைக்கப்படும்.
- - - நன்னாடன்