ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குங்கள்

விடுமுறை நாள்களில் கால அட்டவணை ஒன்றை தயார் செய்து பாருங்கள். நேரத்தினை வீணடிக்க மாட்டோம்.காலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை வேலை,படிப்பு,படைப்பு,உதவி,தொலைக் காட்சி, தொலை பேசி,நண்பர், குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
இரண்டு மணி நேரம் ஒருமுறை உங்கள் அட்டவணை சரி பாருங்கள் .நீங்கள் அதனுடன் ஓத்து செயல்படுகிறீர்களா என்று.ஆம் எனில் உங்களை நீங்களே பாராட்டுங்கள்.இல்லை எனில் உங்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.நீங்களேதான் உங்களுக்கு பார்வையாளர்.
உங்களுக்கு மட்டுமல்ல .உங்கள் குழந்தைக்கும் நேரத்தின் அத்தியாவசியத்தை உணர்த்துங்கள்.உங்களை ஏதாவது வேலையில் ஈடுபடுத்தும்போது எதைப் பற்றிய கவலை இருக்காது.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்கள் .புன்முறுவலுடன் இருங்கள். உங்கள் நேரம் உங்கள் கையில்.
உங்களுக்கு பிடித்த பாடல் கேளுங்கள். .தினம் ஒரு கதை படியுங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள் .உங்களை நேசிப்பவர்களுடன் நேரம் ஒதுக்குங்கள்.வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.

எழுதியவர் : RAMALAKSHMI (11-May-19, 1:40 pm)
சேர்த்தது : RAMALAKSHMI
பார்வை : 274

சிறந்த கட்டுரைகள்

மேலே