அன்னையர் தின வாழ்த்துகள்

ஈரைந்து திங்கள்சுமந்து
ஈன்றெடுத்த அன்னையை
ஈடில்லா இதயத்தை
மறவாதநிலை வேண்டும்
மண்ணில் வாழும்நாம்
மரணிக்கும் நொடிவரை !
உயிர்தந்து உருவாக்கி
உலகை காணவைத்த
உன்னத உள்ளமவள் !
தனைமறந்து நமைநினைத்து
தனையுருக்கி நமைவளர்த்து
தரணியில் தருவாக்கியவள் !
தொழுதிடுவீர் தாயவளை
காத்திடுவீர் வாழும்வரை !
போற்றிடுவீர் பெற்றவளை
வைத்திடுவீர் மனங்குளிர !
அகிலத்தின் அன்னைகளை
அடியேன் வணங்குகிறேன் !
நெஞ்சில் வாழும்
மறைந்த எனது தாயை
நன்றியுடன் வணங்குகிறேன் !
பழனி குமார்