சுவாசம்

மழைநீரில் கரைந்த
கண்ணீர் துளி - என்
மன்னவன் விதைத்த
காதல் விதைகளோடு

உன் நேசம் பொய்யென்றால்
என் நேசம் நிஜமன்றோ...?
நினைவுகளை நெஞ்சில் சுமந்து
சுகங்களை நினைவுகளில் சுமந்தபடி

காலனின் நாட்காட்டியில்
காலச் சக்கரம் விரைவாக
வாழ்வெனும் வசந்தத்தில்
அரும்பு மலரும் தருணம்

மலராகியிருந்தால் கனியாகியிருப்பேன்
மொட்டாகவே மெட்டி அகற்ற முடியாமல்
பூத்திருந்த நாட்கள்
புன்னகைகாட்டி மறைந்திட்டதே

உன் வாசமுடன் வாழ்ந்திடுவேன்
உன் சுவாசம் என்னுடனே...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (13-May-19, 6:44 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : suvaasam
பார்வை : 304

மேலே