தொலைந்து போன இரவுகள்

தொலைந்து போன இரவுகள்!
**********************

(உங்ககளுக்குள் மறைந்து போன ஒருவரை உங்களுக்கே அறிமுகம் செய்யும் கதை)



"சே,ஏன் தா இந்த மேனேஜர்ஸ் இப்டி இருக்காங்களோ, இவ்ளோ கஷ்டப்படட்டு வேலை செய்ஞ்சாலும் தப்பு சொல்றது...." என்று கடிந்து கொண்டே மேனஜர் அறையில் இருந்து வந்த மீராவை நிறுத்தினாள் சுஜா.
"ஹே என்னாச்சு,இன்னைக்கும் சார் கிட்ட நல்ல வாங்குனயா.." என்று அவளை வெறுப்பேற்றினாள். சுஜாவை முறைத்துவிட்டு தன் இடத்தில் அமர்ந்தவள் "இதுக்குதான் அம்மா சொன்ன மாறி இந்த software வேலைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்" என்று முனங்கினாள்.ஆனால் இந்த முனகல் ஒன்றும் முதல்தடவை அல்ல.
"சரிடி விடு,அநத ஆள் அப்படித்தான் கண்டுகாத,உனக்காக நான் ஒன்னு வச்சிருக்கேன்..." என்று ஆசையை மூட்டினால் சுஜா. தான் பார்வையில் எந்த மாற்றமும் இல்லாதவளாய் "என்னது?" என்று ஏளனமாக கேட்டாள் மீரா. சுஜா தன் பையை திறந்து ஒரு புது புத்தகத்தை எடுத்து நீட்டினாள்."அவனது இரவுகள்..-RK" என்று தலைப்பிட்ட புத்தகம்.மீராவிற்கு RK என்றால் கொள்ளை பிரியம்.அந்த புத்தகத்தை தான் வாங்க வேண்டும் என்று நேற்றுதான் சுஜாவிடம் பேசி கொண்டிருந்தாள்."வாவ்,thank u so much சுஜா.." என்று சொன்னவள் கோவம் மறந்து மகிழ்ச்சியில் திளைத்தாள்.அந்த அலுவலகத்தில் மீராவுக்கு கிடைத்த நட்பெண்ணும் பொக்கிஷம் தான் சுஜா.6 மணி ஆகவே எல்லோறோம் வேலை நேரம் முடிந்து கிளம்பினார்கள்,சுஜாவும் தனக்கு முக்கிய வேலை ஒன்று இருப்பதாக கூறி கிளம்பினாள்.புத்தகத்தை பார்த்து கொண்டு இருந்த மீராவின் அலைபேசி அடிக்கவே எதிர்முனையில் அவளது அம்மா..."என்னடி மீரா, ஆஃபீஸ் விட்டச்சா பார்த்து பத்திரமா போ,இங்க விசேஷம் முடியரத்துக்கே நாழி ஆகும் போல,உங்க அப்பாவ கூட்டிட்டு நாளைக்கு எப்படி வரபோறேனே நேக்கு தெரியல.." என்று புலம்பினாள்.
"அம்மா,நான் இங்க பாத்துக்ககிறேன் மா,நீங்க விசஷேம் முடிஞ்சு பத்திரமா வாங்க..."
"சரிடி,அப்றம் இங்க ஒரு வரன் வந்திருக்கு,பையன் பெரிய ஐடீ காம்பனில வேலை பாக்குறான்.."என்று இழுத்தாள்.
"அம்மா...எத்தனை தடவை சொல்றது,கல்யனம்ல இப்போ வேணாம்னு,போமா.." என்று கோவப்பட்டு வெடுக்கென அலைபேசியை துண்டித்தால் மீரா.கோவாத்தோடே தன் ஸ்குட்டியை எடுத்து கொண்டு வீடு கிளம்பினாள்.
மீரா,தகவல் தொழில்நுட்பம் படித்த ஒரு இலக்கியவாதி,மிருதுவான குரலும் உள்ளமும் கொண்டவள்,26 வயது நிரம்பிய யுவதி,தன் கனவுகளை தொலைத்து ஏதோ ஒரு அலுவலகத்தில் அவ்வப்போது உள்ளத்தையும் வைத்து வேலை செய்யும் சாதாரண இந்திய பெண்களுள் ஒருத்தி...."

வீட்டுக்கு வந்ததும் முகம் கழுவி சமைத்து சாப்பிட்ட பின்னே மீராவிற்கு அமைதியும் சலிப்பும் ஒரு சேர வந்தன.ஒருவேளை,எப்போதும் வேலை வீடு என்று இயந்திரமாக இருப்பதில் என்ன சுவாரசியம் இருந்துவிட போகிறது என்ற அர்த்தத்தில் அந்த சலுப்பு அந்த ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம்.அவளுக்கு ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டது.வீடு மொட்டைமாடியை விட மிக சிறந்த இடம் இருப்பதாக அப்போது அவளுக்கு நினைவில்லை.அவளது கண்கள் திடிரென்று சுஜா கொடுத்த புத்தகத்தை படம் எடுக்கவே அந்த புத்தகத்தை கையோடு எடுத்து கொண்டு மாடியில் சென்று உணவினாள்.யாருமில்லா தனிமை,கொஞ்சும் காற்று பிடித்த நாவல் இதுவல்லவா சொர்க்கம்."RK எழுதின எல்ல புத்தகத்தையும் வாங்கி படிச்சிட்டேன் இது தா புது புக், இதை இன்னைக்கு முடிச்சுர வேண்டி்தான்" என்று முடிவெடுத்தாள்.புத்தகத்தை திறந்தாள்.அதில்......முதல் பக்கத்தில்....."யாருக்கும் தெரியாத ஒருவனின் கதை" என்று எழுதப்பட்டு இருந்தது."interesting" என்று சொன்னவாரே காகிதத்தை திருப்பினாள்.படிக்க படிக்க அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு.சொல்லமுடியாத ஒரு இன்பம்.அது ஒரு பழைய எழுத்தாளனின் கதை."....ஒரு பறவையை பார்க்கிறீர்கள்,ஒரு வேடன் அந்த பறவையை அம்பெய்தி கொள்கிறான் ,நீங்கள் வருத்தப்படுவீர்கள்,ஆனால் இறந்து போன பறவைகளை பார்த்து பார்த்து அழுகின்ற அதன் தாய் பறவையின் கண்ணீரோடு தானும் துக்கம் விசாரித்து அதன் வலிகளை எழுத்துகளாய் வடிப்பவன் தான் எழுத்தாளன்...." என்ற வரிகளை படித்து மெய்சிலிரித்துப் போனாள்."அட அடா...Rk நா RK தான். என்ன ஒரு ஆழந்த பார்வை. இல்லைனா சாதாரண ரூபா கிருஷ்ணமூர்த்தி இன்னைக்கு பெரிய writer RK ஆகிருக்க முடியுமா...." என்று முகம் தெரியாத ஆசிரியருக்கு சபாஷ் போட்டாள். இன்னும் வாசித்தாள்...."இந்த நொடி எங்கோ ஒருவன் தன் சம்பாதித்த காசில் தன் கை குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்க கூட முடியாமல் ஏங்கி ஏங்கி அழுது கொண்டுஇருப்பான்,அவனது காயங்களை சத்தமில்லாமல் உங்களுக்கு அறிமுகபத்துவனான் தான் எழுத்தாளனாக இருக்க முடியும்.ஆனால்,வாசிப்பவர்கள் எழுத்தை கொண்டாடுவதை போல அதை செத்துகியவனை கொண்டாடுவதில்லை.ஆனால் அவன் எப்போதும் அங்கீகாரத்தை எதிரநோக்கி எழுதவில்லை.அவன் உள்ளது பாரங்களை இறக்கி வைக்கவே எழுதுகிறான்.எழுத்தை தவிர அவனுக்கு ஆகச் சிறந்த ஆறுதலாய் எதுவுமே இருப்பதில்லை.அவன் எழுதுவதால் அவன் வாழ்கிறான்....."

அந்த வரிகளை படித்தவள், சட்டென மாறிப்போனள்.அவளுக்கு குகனின் ஞாபகம் வந்துவிட்டது.அவனும் அப்படித்தானே இருந்தான் என்று தன்னுக்குள் கேட்டுக்கொண்டாள்.முதன் முறையாக அவள் கண்களில் இருந்த வந்த நீரின் ஈரம் பட்டு காகிதம் கனத்துப் போனது.அது கண்ணீர் துளிகள் அல்ல,நான்காண்டுகளாய் நெஞ்சு சுமந்து இன்று இறக்கி வைக்கும் காதல் என்னும் கர்ப்பதின் மௌன வலிகள். பக்கங்கள் திருப்ப திருப்ப அவளது வாழ்வையும் திரும்பி பார்த்தாள்."குகன் கூட இப்படி பெரிய எழுத்தாளர் ஆகணும் னு சொல்லிட்டே இருப்பான்..." என்றாள்.

முதன்முறையாக அவனை ஒரு புத்தக அரங்கத்தில் பார்த்ததில் இருந்து அவனது பிறந்தநாளில் அவனுக்கு பிடித்தததை பரிசளித்தத்தில் இருந்து காதல் சொல்லி இரு மனம் இணைந்ததில் இருந்து இன்று வரை அவளது இதயம் எதையும் மறக்கவில்லை...."

10 பக்கங்களை முடித்தவள் அடுத்து படிக்க நேர்ந்தது காதல் அத்தியாயம்."...காதலின் ஸ்பரிசம் படா்தவர்வர்கள் யாரேனும் இருக்க முடியுமா?அப்படி இருந்தாள் மானிட பிறவியில் சபிக்கப்பட்டவர்கள்...." என்ற வரிகள் அவளது உள்ளத்தை தொட்டது.மீராவின் உள்ளத்து மொழிகளை யாராலும் அறியமுடியாது.ஆணின் காதலை விட ஒரு பெண்ணின் காதல் கணமானது.10 மாதங்கள் கருவோடு சேர்த்து ஆண்டாண்டுகளாய் காதலையும் சுமக்கிறாள் இல்லையா.

மீராவின் நெஞ்சமெல்லாம் குகன் மட்டுமே இப்போது நிறைந்திருக்கிறான்."நான் முக்கியமா இல்லை உன் கனவு முக்கியமா " என்று கேட்டதற்கு தன் கனவை தொலைத்துவிட கூடாதென்று எங்கோ சென்று மறைந்தவனை நினைத்து பார்க்கிறாள்.அந்த முழுநிலவின் ஒளியில் அவனும் அவளை நினைத்துக்கொண்டுதான் இருப்பான் என்பதில் அவளுக்கு ஐயமில்லை.

Rk வின் அடுத்த வரிகள் தான் அவளை புரட்டி போட்டன...
".....அவனுக்கும் காதல் இருந்தது.ஆனால் எல்லோரையும் போல் அல்ல.அது காதலாக இருந்தது.ஒரு ராத்திரி நேரம்,மழை முடிந்த சில்லென்று இருக்கும் யாருமில்லா சாலை அதில் அவனும் அவளும்.10 நிமிட நடை பயணம் நெடுந்தூர மகிழ்ச்சியை தந்தது...."

இப்போது அவள் அழுகிறாள்.ஏங்கி ஏங்கி அழுகிறாள்.ஆனால்,அவள் அழுகைக்கு அழுகை மட்டுமே ஆறுதலாக இருந்தது."டே குகன்,நீ எங்கட இருக்க எனக்கு பாக்கணும் போல் இருக்குடா..." என்று சொல்லிக்கொண்டு அழுதாள்.மற்றவற்றை போல காதலை அவ்வளவு எளிமையாக கடந்து சென்று விட முடிவதில்லை.அதற்கு சில வருடங்களும் பல கண்ணீர்துளிகளும் தேவைப்படலாம்.

நினைவுகளின் நித்திரையில் அவள் தொலைந்து போனாள்.அவன் இல்லாத அவளது பொழுதுகள் அவர்களால் நிரப்பப்பட்டவை.

"ஹே மீரா, உனக்காக ஒரு கவிதை எழுதிருக்க்கேன்" என்று அவன் சொல்லும் போதெல்லாம் ஏளமாய் சிரிப்பாலே அதை நினைத்துப்பார்த்தாள்.அவளுக்கு வாங்கி கொடுத்த falooda, அவனுக்கு வாங்கி கொடுத்த வாட்ச்,இருவருக்கும் சேர்ந்து விளையாடிய வயல்வெளி,ஒன்றை ரசித்த பட்டிமன்றம்,பேசிய மேடை,மறைந்து போன வார்த்தைகள்.....எல்லாமும் எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கண்முன் தோன்றின.வெள்ளைஅடித்த அந்த சுவரில் சாய்ந்து கொண்டு நினவலையில் நீந்தினாள்.மனசுக்கு யார் வெள்ளைஅடிப்பது!

கால ஓட்டத்தில் காதலும் கடந்து சென்றாலும் அது விட்டு சென்ற நினைவுகள் என்னும் பிம்பங்கள் ஒருபோதும் மாறுவதில்லை மறைவதும் இல்லை.அது அவளுக்கும் தெரியும்.

நிலா கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வெடுக்க சென்றது.புத்தகத்தை கடைசி பக்கத்தில் கடைசி வரி. அதை படித்துவிட்டு முடிவிட்டாள் மீரா.

புதிய சூரியன் ஒளித்த பின், புத்தியவாளாய் அவசரமாக சமையல் செய்து சாப்பிட்டு அலுவலகம் செல்ல தயாரானாள்...."சுஜா,இது கிளம்பிட்டேன் டி,10 மினிட்ஸ் வந்திருவேன்..." என்று அலைபேசியில் பேசிய 10 நிமிடத்தில் அலுவலகத்தில் இருந்தால் மீரா. அவளது மேஜையில் ஒரு வாடிக்கையாளரின் விண்ணப்பம், விண்ணதாரரின் பெயர் குகன் என்று அதில் இருந்தது.அவள் ஒரு அசட்டு புன்னகையால் அந்த பெயரை கடந்து சென்றாள் நேற்று படித்த அந்த புத்தகத்தின் கடைசி வரிகளை நினைத்துக் கொண்டு. "காலங்கள் மாறும்,காதல்கள் மாயும்,காயங்கள் ஆறும் ஆனபோதிலும் மாறாத அன்பின் பெரும் நினைவுகள் மட்டும் தாலாட்டும் தாய் போல என்றும் நிலைத்திருக்கும்..."



கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (15-May-19, 6:52 am)
பார்வை : 545

மேலே