சமையல் குறித்து எழுதும் போட்டி------------------நம்ம சமையல்

வணக்கம்,

சமையல் குறித்து எதுவும் எழுதலாம்!

-----------------------

சமையல் கலை மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கம்! உணவில்லையேல் உயிரில்லை. மனித நாகரிகத்தில் சமையலும் ஒரு கலையாகவே பரிணமித்திருக்கிறது. அக்கலையின் நுட்பங்களை பேசுவதே இப்போட்டியின் நோக்கம்.

சமையல் குறித்து எதுவும் எழுதலாம். புதிய புதிய உணவு வகைகள் செய்வது எப்படி என்பது குறித்து, சமையலறை பராமரிப்பு குறித்து, நீங்கள் இரசித்து உண்ட உணவுகள் குறித்து, பல்வேறு வகைப்பட்ட உணவுமுறைகள் - உணவு கலாச்சாரங்கள் குறித்து, உணவே மருந்தாவது குறித்து, நீங்கள் கடைபிடிக்கும் சமையல் இரகசியம் குறித்து என எதுபற்றியும் எழுதலாம்.

படைப்புகளை சேர்க்கவேண்டிய கடைசி நாள் - ஜூன் 9, 2019. போட்டிக்கு வந்த படைப்புகள் ஜூன் 12ஆம் தேதி வாசகர் பார்வைக்கு வைக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் அன்றே தெரிவிக்கப்படும்.

பரிசுத்தொகை :

மொத்தம் 5 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஐந்துமே வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000ரூ பரிசாக வழங்கப்படும்.

முக்கியமானவை :

1) ஒருவர் அதிகபட்சம் 5 படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்க இயலும்.

2) நீங்கள் சமர்ப்பிக்கும் படைப்பு உங்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். (வேறு ஒருவருடைய படைப்பை எடுத்து சமர்ப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது)

3) படைப்புகளை போட்டிப் பக்கத்தில் மட்டுமே சேர்க்க இயலும்.

எப்படி பங்கேற்பது?

போட்டிப் பக்கத்தின் கீழே உள்ள 'பங்கேற்க' பொத்தானை அழுத்தி கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ, செயலியிலிருந்தோ படைப்புகளை சமர்ப்பிக்கலாம். படைப்பை அதன் பக்கத்தில் தட்டச்சு செய்யலாம் அல்லது copy - paste செய்யலாம். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் 'உங்கள் படைப்புகள்' எனும் தலைப்பின்கீழ் தெரியும். ஒவ்வோரு படைப்பையும் தனித்தனியே சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் ஜூன் 12ஆம் தேதி பிரதிலிபி குழுவால் பதிப்பிக்கப்படும்.

படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதவும். அதிகப் பிழைகள் இருந்தால் பரிசு பெறும் படைப்பாக தேர்ந்தெடுக்கப்படாது. படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899.

பங்கேற்க

எழுதியவர் : பிரதிலிபி (15-May-19, 4:52 pm)
பார்வை : 18

மேலே