அழகிய மாலை பொழுது

இருளானது
சூரியனை விழுங்கி
வானத்தை தன்வசம்
ஆக்கிகொண்டிருந்த நேரமது

இருளிடம் அகப்பட மறுத்த சூரியன்
உயர்ந்த மலைக்குபின்னால்
தன்னை மறைத்து கொண்டது

சூரியனின் மறைவை தாங்க முடியாமல்
சிவந்தது வானம்

வானத்தின் வலியை போக்க
தென்றல் காற்று
அங்கும் இங்குமாய்
உரசி கொண்டிருந்தது

தென்றல் காற்றின் உரசலில்
வானத்தில் பறந்த குருவிகள்
திசை தெரியாமல் திரிந்து
கொண்டிருந்தது

தாய் குருவியின் திக்கு முக்காடல்களை கண்ட குஞ்சுகள்
கூட்டில் இருந்தபடி குரல் கொடுத்து
அழைத்து கொண்டிருந்தது

முழு இரவும்
ஆட்சி செய்ய தொடங்கியது

ஒருவழியாக
குருவிகள் கூட்டை சென்றடைந்தது
வானம் தென்றல் காற்றின் ஆறுதலில்
அமைதி கொண்டது

இரவின் ஆட்சியில்
நிலவு தலமை தாங்க
மேகங்கள் தகவல் பரிமாற
நட்சத்திரங்கள்
வர்ண கோலமாய் வானத்தை
அலங்கரித்தது

அதில் ஏனோ ஒரு நட்சத்திரம் மட்டும்
வால் முளைத்த குரங்கு போல
தாவி கொண்டிருந்தது

ஓ !!!

அதுதான் வால் நட்சத்திரமோ

சூரியன் ஆட்சியில்
வானத்தை அண்ணாந்து பார்க்க கூட
அனுமதி மறுக்க பட்டது

ஆனால் நிலவின் ஆட்சியிலோ
அளவுக்கு அதிகமாய்
வழங்க பட்டது
அனுமதி

அண்ணாந்து பார்த்த படி
படுத்து கொண்டிருந்தேன்
மொட்டை மாடியில்

நேரம் செல்வதும் தெரியவில்லை
உறங்கியதும் தெரியவில்லை
விழிப்பதற்குள்

மீண்டும் சூரியன் ஆட்சி
தொடங்கிவிட்டது

முன்னாள்
மலைக்கு பின்னால் மறைந்த சூரியன்
இப்பொழுது
சமுத்திரத்தின் உதவியுடன்
மீண்டெழுந்து
இரவை விரட்டியது போலும்

காத்திருக்கிறேன்
மீண்டும்
நிலவின் ஆட்சி தொடங்க ...

எழுதியவர் : ரஞ்சித் வாசு (15-May-19, 4:07 pm)
சேர்த்தது : Ranjith Vasu
பார்வை : 695

மேலே