ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

தமிழ் மகள்
விளையாடினாள்
என்னுடன்
கவிதையாக!.

பொன் தட்டில்
மண்ணில் விளைந்த
அரிசிச் சோறு !

சுற்றிக் கொண்டே
இருந்தாலும்
மயக்கம் வரவில்லை
வினாடி முள் !

அவன்
கண் இமைகளை
மூட முடியவில்லை
கண்களுக்குள் காதலி!

சந்தையில் அவன்
வாழ்க்கையில் கடந்து போன
காலடிச்சுவடுகளை
வாங்கமுடியவில்லை !

உழவனின் வியர்வை
முத்துக்களைக் கண்டு
கடல் முத்துக்களே
தலை குனிகின்றன!


கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை ,சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (17-May-19, 5:59 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 271

மேலே