ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


திருமணத்தடை
கிரகங்களால் அல்ல
சோதிடர்களால் !

தவிக்கின்றனர்
வரன் கிடைக்காமல்
ஆணும் பெண்ணும் !

பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
பூமி மீது சூரியன் !

சிந்தியுங்கள்
எல்லாப் பொருத்தம் இருந்தும்
ஏன் மண விலக்கு !

வாழ விடாமல் தடுத்து
வாழ்கின்றனர்
சோதிடர்கள் !

ஒவ்வொரு சோதிடரும்
ஒவ்வொரு மாதிரி
ஒரே ராசிக்கு !

நேரம் தாள் விரையம்
பத்திரிகைகளில்
ராசிபலன் !

மூழ்கி விடுகின்றனர்
மூடநம்பிக்கையில்
தமிழர்கள் !

விபத்தில் மரணம்
ராசிக்கல் மோதிரம்
அணிந்தவர் !

இரண்டும் ஒன்று
பழைய வீட்டு புதுப்பித்தல்
கிழவிக்கு ஒப்பனை !

வெகு சிலரே
தங்கம் வெறுக்கும்
தங்க மங்கைகள் !

தரையிலும் நடக்கும்
சுவற்றில் ஏறும் அணில்
மனிதன் ?

நினைவு படுத்த வேண்டியுள்ளது
மனிதனாக வாழ
மனிதனை !

நல்ல நேரம் கெட்டநேரம்
நம்பவில்லை
நம்ம அப்துல் கலாம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-May-19, 4:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 133

மேலே