அரசுப் பேருந்தின் அசுர வேகம்
மாடும் மாட்டு வண்டியும்
மகத்துவமாய் தெரியும்
ஓட்டும் ஓட்டுனரின்
கைவண்ணச் சிறப்பைக் கொண்டு
அலுவலகம் செல்ல அவசரமாய் கிளம்பி
அணிவகுத்து நிற்கும் - அரசு
ஊர்தியில் ஏறினால் எல்லா
உணர்வும் உன்னைப் பற்றும்
வேண்டும் இடத்திற்கு
விரைவாகச் செல்ல
முயன்று நீயும் முடிவு செய்து விட்டால்
முன் ஊர்தியைப் பிடிப்பது மும்மடங்கு பலம்.
--- நன்னாடன்