தீண்டல்
போர்த்தி பொத்திய அந்த
சேலை தலைப்பில்
புத்துயிரூட்டிப் பிறந்த - அந்த
புன்னகையில்....
இழந்து போன சொர்க்கம் தேடி..
இழப்பை மட்டும் ஈடுசெய்தபடி...
பார்வைகள் புறந்தள்ள...
பார்க்க மறந்த
பார்வைகளின் தேடலில்
எதனையோ தேடியபடி...
வானத்திற்கு தெரியாமல்
கிணற்றில் விழுந்த - அந்த
நிலவின் கனவு...
கண்களை மூடியபடி..
நீச்சங்களையும் நிதர்சனம் என்றபடி...
புதிதாக பூத்தமலர்...
புன்னகைத்தபடி
உதிரும் தருவாயில்..
உதிரத்தினை உதிர்த்தபடி - பல
மலர்கள்...
விடியாத இரவொன்றை
விடியலாக கொண்டே
விரையும் விட்டில் பூச்சிகள்
விடியலை காணும் நேரம்....?
விந்தை என்றுணர
எங்கோ தொலைந்த
அந்த ஞாயிரின் வெம்மை
வெண்மதியவளிடம்...
நீருபூத்த நெருப்பாய்
குளிர் காய்ந்தபடி...
பகலவனின் வெளிச்சப்புள்ளிகள்
பல்வகை ஜனனித்திட...
வெண்மதியவள்..
வெக்கப் புன்னகையில்
வெளிரிய நிறம் கொண்டு
வெண் மேகத்திடம் வேண்டுகின்றாள்..
என்னை தீண்டாதேயென...