காதல்
பால் நிலவொத்தப் பாவை அவள்
அழகே அழகு அழகுதான் அவள்
கார்மேகம்போல் நிறத்தான் அவன்
அவளுக்கு அவன் மீது ஆராக் காதல்
நிலவுக்கு மேகம் மீது காதல்போல்
பார்த்த சிலர் இதென்ன பௌர்ணமி
அமாவாசையோடு ஒருங்கே உறவாடுதே
என்று வியக்க பின் இப்படித்தான்
அமாவாசை இரவிலும் பௌர்ணமி
தோன்றுமோ அதிசயமே இது தெளிந்தார்.